நேர்த்தியாக! | Perfectly! - Christking - Lyrics

நேர்த்தியாக! | Perfectly!



"அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்" (பிர. 3:11).

கர்த்தர் ஒரு காரியத்தைச் செய்யும்போது அதை நேர்த்தியாய் செய்கிறவர். கர்த்தர் உலகத்தையும், அதிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டிக்க நினைத்தபோது அதை நேர்த்தியாய் செய்தார்.

சிறிய செடி, கொடி முதல் வானளாவ நிற்கும் மலைகள் எல்லாவற்றையும் அவர் நல்லதாகவும், நேர்த்தியாகவும் செய்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது" (சங். 19:1).

கர்த்தர் சிருஷ்டிப்பிலே மட்டுமல்லாமல், உங்களுடைய வாழ்க்கையிலும் எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்கிறவர். அநேகர் அவசரப்பட்டு, தங்கள் சுய விருப்பத்தின்படி செய்து முடிவில் வேதனைப்படுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பலத்த கரத்தில் அடங்கி எதிர்பார்த்திருக்கிறவர்களோ, கர்த்தர் தனக்காக எல்லாவற்றையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்கிறவர் என்பதை அறிந்து கொள்ளுகிறார்கள்.

ஒரு சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதினிமித்தம் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்டாள். அவளுக்கு போதுமான ஞானமோ, அறிவோ, பெலனோ இல்லை. திருமண நேரம் வந்தபோது, கர்த்தர் ஏற்ற வாழ்க்கை துணையைக் தெரிந்தெடுத்துக் கொடுத்தார். அவளுடைய பெற்றோர் திருமணத்திற்கு வரவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. ஆனாலும் அந்த திருமணம் தெய்வீக பிரசன்னத்தோடு எல்லாம் நிறைவாய் மிகவும் மகிமையாய் நடந்தேறியது. கர்த்தரோ அந்த சகோதரிக்காக வைராக்கியமுடையவராய் முன் நின்று அவளது திருமணத்தை நேர்த்தியாய் நடத்திக்கொடுத்தார்.

சாலொமோன் ஞானி, "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்" (நீதி. 13:12) என்று சொல்லுகிறார். ஏன் கர்த்தர் தாமதிக்கிறார்? ஏன் என் ஜெபத்திற்கு பதில் வரவில்லை? ஏன் என் ஆசீர்வாதத்திற்கு தடை என்று நீங்கள் கலங்கலாம்! ஒன்றை மாத்திரம் மறந்து போகாதேயுங்கள். கர்த்தர் ஒருபோதும் தாமதிக்கிறவரல்ல. அவர் ஒரு காரியத்தை செய்ய முந்தவுமாட்டார். பிந்தவுமாட்டார். அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்து முடிப்பார்.

அப். பேதுரு சொல்லுகிறார், "ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" (1 பேதுரு 5:6). ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு என்று பிரசங்கி ஏறக்குறைய 28 வகையான காலங்களை வரிசைப்படுத்தி எழுதுகிறார். அதிலே ஒரு காலம் உங்களை உயர்த்தும்படியான காலம். சகலத்தையும் உங்களுக்காக நேர்த்தியாய் செய்து முடிக்கிற காலம். அதுபோலவே கர்த்தர் உங்களை சந்திக்கிற ஒரு காலமுண்டு. உங்களோடு இடைபடுகிற ஒரு காலமுண்டு. உங்களுடைய வாழ்க்கையிலே மகிமையான மாறுதல்களை கொண்டு வருகிற சந்தர்ப்பமுண்டு. தேவபிள்ளைகளே, அந்தக் காலத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும்போது நேர்த்தியாய் உயர்த்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நினைவிற்கு:- "கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்" (சங். 92:4).


“He has made everything beautiful in its time” (Ecclesiastes 3:11).

When God does a thing, He does it beautifully. When God thought of creating the world and all the things in it, He did it beautifully.

From the tiny plants to the huge mountains, He has done everything beautifully. The Scripture says, “The heavens declare the glory of God and the firmament shows His handiwork” (Psalm 19:1).

Not only in the creations, but also in your life God is doing everything beautifully. Many people hastily do things based on their self-will and in the end, suffer. But those who stay with expectations submit themselves humbly within the mighty hand of God understand that God does everything beautiful in its time.

One sister was sent out of her home for the reason that she had accepted Jesus Christ. She was not fully equipped with wisdom, knowledge or strength. But even then, when the time of getting married arrived, God chose a good partner for her. Her parents did not attend the marriage. Neither did they help her in any way. But the marriage was conducted with divine presence and everything was done gloriously. With zeal, God stood for her and conducted the marriage most perfectly.

Solomon the wise says, “Hope deferred makes the heart sick, but when the desire comes, it is a tree of life” (Proverbs 13:12). You may worry saying “why God is delaying things? Why there is no answer to my prayer? Why is this obstacle for my blessings?” Do not forget one thing. God is never one to delay things. He will neither be hasty in doing things nor will delay. He will do everything in its time.

Peter the Apostle says, “Therefore humble yourselves under the mighty hand of God, that He may exalt you in due time” (I Peter 5:6). Ecclesiastes has listed out 28 types of seasons and one among them is the time to exalt you. It is the time in which He does everything for you beautifully. Similarly, there is a time in which God meets you. There is a time in which he interacts with you. There is a time in which He brings out glorious changes in your life. Dear children of God, when you make use of such times you will be perfectly exalted and will be blessed.

To meditate: “For you, Lord, have made me glad through your work; I will triumph in the works of your hands” (Psalm 92:4).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நேர்த்தியாக! | Perfectly! நேர்த்தியாக! | Perfectly! Reviewed by Christking on April 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.