Aaseervathiyum Karththarae Aanantha Mikavae - ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே - Christking - Lyrics

    Aaseervathiyum Karththarae Aanantha Mikavae - ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே


    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
    நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
    வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
    மேசியா எம் மணவாளனே
    ஆசாரியரும் வான் ராஜனும்
    ஆசீர்வதித்திடும்

    இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
    உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
    இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
    இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
    உம்மிலே தங்கி தரிக்க
    ஊக்கமருளுமே ( வீசிரோ )

    ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
    பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
    வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
    வீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்
    ஏற்றவான் ராயர் சேயர்க்கே
    ஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ )

    பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
    ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
    மாதிரளாக இவர் சந்ததியார்
    வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
    ஆ! தேவ கிருபை தீர்மானம்
    ஆம் போல் அருளுமேன் ( வீசிரோ )


    Aaseervathiyum Karththarae Aanantham Mikavae
    Naesaa Uthiyum Suththarae Niththam Makilavae
    Veesiro Vaana Jothi Kathiringae
    Maesiyaa Em Manavaalanae
    Aasaariyarum Vaan Raajanum
    Aaseervathiththidum

    Immanamakkalo Dentum Ententum Thangidum
    Ummaiyae Kanndum Pin Sentum Ongach Seytharulum
    Immaiyae Motchamaakkum Vallavarae
    Inpaththo Danpaakki Sootchamae
    Ummilae Thangi Tharikka
    Ookkamarulumae ( Veesiro )

    Ottumaiyaakkum Ivarai Oodaaka Neer Ninte
    Pattadum Meethu Saarnthumae Paaril Vasikkavae
    Vetti Pettangum Ivar Nenjaththilae
    Veettalum Neer Yesu Raajanaay
    Aettavaan Raayar Seyarkkae
    Oppaay Olukavae ( Veesiro )

    Poothala Aaseervaathaththaal Pooranamaakavae
    Aathariththaalum Karththarae Aaseervathiththidum
    Maathiralaaka Ivar Santhathiyaar
    Vanthuthiththummaip Pirasthaapikka
    Aa! Thaeva Kirupai Theermaanam
    Aam Pol Arulumaen ( Veesiro )

    Aaseervathiyum Karththarae Aanantha Mikavae - ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே Aaseervathiyum Karththarae Aanantha Mikavae - ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம்  மிகவே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.