Em Uyarntha Vasasthalamadhuve - எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே - Christking - Lyrics

Em Uyarntha Vasasthalamadhuve - எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே


எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
எம் பூரண சீயோனே

கன்மலையின் மேலே கழுகுபோல்
உன்னதத்தில் வாழுவோம் – இயேசு
பக்தர்கள் ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்

1. ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்

2. அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்

3. மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்

4. ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்

5. வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே

6. வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்


Em Uyarntha Vaasasthalamathuvae Em Poorana Seeyonae
Kanmalaiyin Maelae Kalukupol Unnathaththil Vaalvom –
Yesu Paktharkalae Jeyam Pette
Pithaa Mukam Kaannpom

1.njaanak Kanmalaiyae
Kiristhaesu Em Arannee Vaana Seeyonilae
Avar Aaviyaal Piranthom Aelu Thoonnkaludan
Thida Asthipaaramudan Aesuvin Mael
Nintu Veedaay Naamilangiduvom

2.anpin Pooranamae Athilae Payamillaiyae
Anpar Yesuvidam Athai Naati Pettidavae
Aaviyaal Nirainthae Avar Anpilae Nadanthae
Aa!paerinpa Aathma Vaalvil Aananthang Kolvom

3.maasaamaathaanamae Visuvaasa Nampikkaiyae
Maa Parisuththamae Maranaththin Paadukalae
Thaeva Saayalumae Nammil Pooranam Ataiya
Thooya Vaalvai Naati Naam Munnaeriyae Selvom

4.ottamae Jeyamaay Naamum
Otiyae Mutikka Ovvoru Thinamum
Puthiya Pelanataivom
Paava Saapangalum Puvi Aasaiyum
Jeyiththor Paalulakai Vaekam Thaannti Akkarai Servom

5.vaanangal Valiyae Irangi Paran Varuvaar
Vaanjaiyaay Sapaiyaay Antu Yaesuvai Santhippom
Meetpin Naal Nerunga Thalaikal Uyarththiduvom
Maththiya Vaana Virunthil Naamae Pangatainthiduvom

Em Uyarntha Vasasthalamadhuve - எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே Em Uyarntha Vasasthalamadhuve - எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.