Enkum Pukazh Iyaesu Iraajanukkae - எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே - Christking - Lyrics

    Enkum Pukazh Iyaesu Iraajanukkae - எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே


    எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே
    எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

    உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும்
    உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் –

    1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
    அதை அறிந்து துதி செய்குவீர்
    தாயினும் மடங்கு சதம் அன்புடைய
    சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்

    2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
    கடன் பட்டவர் கண் திறக்கவே
    பல்வழி அலையும் பாதைதப்பினோரைப்
    பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்

    3. தாழ்மை சற்குணம் தயை காருண்யமும்
    தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
    பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
    பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?

    4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
    தூதர் நீங்களே தூயன் வீரரே
    கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
    கருணை நிறை வசனம் கற்றிடுவீர்


    Engum Pukal Yesu Iraajanukkae
    Elil Maatchimai Valar Vaaliparae!

    Ungalaiyallavo Unnmai Vaethangaakkum
    Uyar Veerarenap Pakthar Othukiraar –

    1. Aayirath Thoruvar Aaveerallo Neerum
    Athai Arinthu Thuthi Seykuveer
    Thaayinum Madangu Satham Anputaiya
    Saami Yesuvukkithayam Thanthiduveer

    2. Kalvi Kattavarkal Kalvi Kallaathorkkuk
    Kadan Pattavar Kann Thirakkavae
    Palvali Alaiyum Paathaithappinoraip
    Parinthu Thiruppa Nitham Paarththiduveer

    3. Thaalmai Sarkunam Thayai Kaarunnyamum
    Thalaippathallo Thakuntha Kalvi?
    Paalunthurkkunamum Paavach Seykaiyaavum
    Paranthodap Paarppathungal Paaramanto?

    4. Suththa Suvisesham Thurithamaaych Sella
    Thoothar Neengalae Thooyan Veerarae
    Karththarin Paathaththil Kaalai Maalai Thangik
    Karunnai Nirai Vasanam Kattiduveer

    Enkum Pukazh Iyaesu Iraajanukkae - எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே Enkum Pukazh Iyaesu Iraajanukkae - எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே Reviewed by Christking on August 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.