Enkumulloer Yaarum Saernthu - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து - Christking - Lyrics

    Enkumulloer Yaarum Saernthu - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து


    எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
    இஸ்ரவேலின் கர்த்தருக்கு துதி செலுத்துமே
    யாக்கோபின் சந்ததியாரும் கூடிவாருமே
    இயேசு எங்கள் கர்த்தர் என்றே ஸ்தோத்தரிப்போமே

    1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
    பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
    கடந்தகால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
    ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
    கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
    செத்ததாகில் பலன் மிகுதி – ஸ்தோத்தரிப்போமே!

    2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
    இராஜாவின் கட்டளைக்கு கனம் கொடுப்போமே
    தேவசமுகப் பழக்கம் உள்ளோர் கொள்ளமாட்டார்
    கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
    அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
    நித்திய மகிழ்ச்சி அவரைமூடும் ஸ்தோத்தரிப்போமே!

    3. அத்திமரம் துளிர்விடாமல் போனபோதிலும்
    திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
    ஒலிவமரத்தின் பலன்கள்கூட அற்றுப் போயினும்
    வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்த போதிலும்
    இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
    நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே!


    Engumullor Yaarum Sernthu Sthoththarippomae
    Isravaelin Karththarukku Thuthi Seluththumae
    Yaakkopin Santhathiyaarum Kootivaarumae
    Yesu Engal Karththar Ente Sthoththarippomae

    1. Thaeva Mainthan Yesuvukkaay Sthoththarippomae
    Parisuththaakamam Eenthatharkaay Sthoththarippomae
    Kadanthakaala Veerarukkaay Sthoththarippomae
    Jeevan Vitta Suththarukkaay Sthoththarippomae
    Kothumai Manni Thaniththaal Ilaapam Aethu Unndu Paareer
    Seththathaakil Palan Mikuthi – Sthoththarippomae!

    2. Nampikkai Ilakkaavannnam Mun Nadappomae
    Iraajaavin Kattalaikku Kanam Koduppomae
    Thaevasamukap Palakkam Ullor Kollamaattar
    Geelppatiyak Kattukkonntoor Thadumaattam Kollaar
    Avarkkaay Ilanthavarkkup Parisu Nooraththanaiyaakak Kittum
    Niththiya Makilchchi Avaraimoodum Sthoththarippomae!

    3. Aththimaram Thulirvidaamal Ponapothilum
    Thiraatchaைch Setiyil Kani Kaannaamal Karukippoyinum
    Olivamaraththin Palankalkooda Attup Poyinum
    Vayalil Makasool Inti Aekkam Vantha Pothilum
    Immaikkaaka Alla Yesunaathar Maelae Ulla Pattu
    Nam Iruppu Paralokaththil Sthoththarippomae!

    Enkumulloer Yaarum Saernthu - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து Enkumulloer Yaarum Saernthu - எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து Reviewed by Christking on August 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.