Oru Maruntharum Kurumarunthu Song Lyrics
- TAMIL
- ENGLISH
ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் நான் கண்டேனே.
அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,
வரும் வினைகளை மாற்றும் மருந்து,
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. — ஒரு
1. சிங்கார வனத்தில் செழித்த மருந்து,
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,
அங்குவிளை பவம் மாற்றும் மருந்து,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து — ஒரு
2. மோசே முதல் முன்னோர் காணா மருந்து,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து — ஒரு
3. தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,
செவிடு குருடூமை தின்ற மருந்து,
மானா திருத்துவ மான மருந்து,
மனுவாய் உலகினில் வந்த மருந்து. — ஒரு
4. செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,
ஜீவன் தவறா தருளும் மருந்து,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. — ஒரு
Oru Maruntharum Kurumarun-(Thu)
Umparaththil Naan Kanntaenae.
Arul Marunthudan Aanantha Marunthu,
Aathiyittanaay Mulaiththa Marunthu,
Varum Vinaikalai Maattum Marunthu,
Varumaiyullorkkae Vaayththa Marunthu. — Oru
1. Singaara Vanaththil Seliththa Marunthu,
Jeevatharu Meethil Padarntha Marunthu,
Anguvilai Pavam Maattum Marunthu,
Valla Sarppa Visham Maayththa Marunthu — Oru
2. Mose Muthal Munnor Kaannaa Marunthu,
Motcha Makimaiyaik Kaattum Marunthu,
Thaesaththor Pinniyaith Theerththa Marunthu,
Theerkkatharisikal Seppiya Marunthu — Oru
3. Theeraatha Kushdaththaith Theerththa Marunthu,
Sevidu Kurutoomai Thinta Marunthu,
Maanaa Thiruththuva Maana Marunthu,
Manuvaay Ulakinil Vantha Marunthu. — Oru
4. Seththorai Uyiro Deluppum Marunthu,
Jeevan Thavaraa Tharulum Marunthu,
Paththaraich Suththikariththidum Marunthu,
Parama Vaalvinil Serkkum Marunthu. — Oru
Oru Maruntharum Kurumarunthu Song Lyrics
Reviewed by Christking
on
December 11, 2020
Rating:
No comments: