Yesu Maharajan Piranthar - இயேசு மகாராஜன் பிறந்தார் | Christmas Song - Christking - Lyrics

Yesu Maharajan Piranthar - இயேசு மகாராஜன் பிறந்தார் | Christmas Song


இயேசு மஹாராஜன் பிறந்தார்
பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார்
வரவேற்கவே தூதர்களெல்லாம்
பாடினர் அல்லேலூயா

உன்னதத்தில் மகிமையும்
இப்பூவில் சமாதானம்
உண்டாகட்டும்

சரணம் I
அழகிய இரவு இது - நிர்மல இரவு
இளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு - 2
ஜீவ ஒளியாய் பாரில் இயேசு
உதித்த மகத்துவ இரவு

சரணம் II
நம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவு
நம் பாரம் சுமக்க அவர் வந்த இரவு
புதியொரு உலகம் பாரில் தோன்ற
இயேசு பிறந்த இரவு

சரணம் III
மிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவு
ஞானிகள் பிள்ளையைத்தேடி வந்த இரவு
இடையர்கள் பாடி துதித்த இரவு
மாதேவ மகிமையின் இரவு


English


Yesu Maharajan Piranthar - இயேசு மகாராஜன் பிறந்தார் | Christmas Song Yesu Maharajan Piranthar - இயேசு மகாராஜன் பிறந்தார் | Christmas Song Reviewed by Christking on December 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.