Pavathin Sambalam - பாவத்தின் சம்பளம் | Bro.R. Prince Charles - Christking - Lyrics

    Pavathin Sambalam - பாவத்தின் சம்பளம் | Bro.R. Prince Charles


    பாவத்தின் சம்பளம் மரணம் என்று
    தேடி போனேன் அதை
    தேடி வந்தாரே என்னை-2
    வாழ்க்கை இது அல்ல
    என்று சொன்னாரே-2
    வாழும் வழி எனக்கு
    தந்து சென்றாரே-பாவத்தின்

    1.தம் சாயல் கொடுத்து
    தம் ஜீவ காற்றையும்
    கொடுத்துன்னை படைத்தவர்
    கைவிடுவாரோ-2
    நீ உன்னை வெறுக்கலாம்
    தேவனை மறக்கலாம்
    தாயின் கருவறையில்
    கண்டவர் கைவிடுவாரோ-2-பாவத்தின்

    2.தன்னோடு கூட
    கள்ளனை கூட நீ என்னோடே
    பரதீசீல் இருப்பாய் என்றார்-2
    நாம் நம்மை ஒப்புவிப்போம்
    தேவ நாமம் உச்சரிப்போம்
    பரலோகில் நம்மை சேர்க்கும்
    தேவனோடு சஞ்சரிப்போம்-2-பாவத்தின்

    3.பாவத்தில் அகப்பட்ட
    ஸ்திரீயையும் கூட
    உன் பாவம் உனக்கு
    மன்னிக்கப்பட்டதென்றாரே-2
    நீ என்ன பெரும் பாவியோ
    மன்னிப்பே உனக்கில்லையோ
    மாறாத மா நேசரே
    மன்னிக்கவும் வல்லவரே-2-பாவத்தின்

    English


    Pavathin Sambalam - பாவத்தின் சம்பளம் | Bro.R. Prince Charles Pavathin Sambalam - பாவத்தின் சம்பளம் | Bro.R. Prince Charles Reviewed by Christking on March 31, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.