Allakai nirkum yaar / அழகாய் நிற்கும் யார் இவர்கள் - Tamil Christian Songs Lyrics

    Allakai nirkum yaar / அழகாய் நிற்கும் யார் இவர்கள் - Tamil Christian Songs Lyrics

    அழகாய் நிற்கும் யார் இவர்கள்
    திரளாய் நிற்கும் யார் இவர்கள்
    சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்

    எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்
    எல்லா மொழியும் பேசும் மக்களாம்
    சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
    சீர் போராட்டம் செய்து முடித்தார்

    வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு
    வெள்ளை குருத்தோலை பிடித்து
    ஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்பு
    ஆட்டுக்குட்டிக்கே மகிமை என்று

    தனிமையிலும் வறுமையிலும்
    லாசரு போன்று நின்றவர்கள்
    யாசித்தாலும் போஷித்தாலும்
    விசுவாசத்தை காத்தவர்கள்

    ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
    அற அகற்றி துடைத்திடுவார்
    அழைத்துச் செல்வார் - இன்ப ஊற்றுக்கே
    அள்ளிப் பருக இயேசு தாமே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Allakai nirkum yaar / அழகாய் நிற்கும் யார் இவர்கள் - Tamil Christian Songs Lyrics Allakai nirkum yaar / அழகாய் நிற்கும் யார் இவர்கள் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.