Ekkala satham / எக்காள சத்தம் வானில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ekkala satham / எக்காள சத்தம் வானில் - Tamil Christian Songs Lyrics


    எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
    எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் (2)

    அந்த நாள் மிக சமீபமே
    சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே (2)
    தேவ எக்காளம் வானில் முழங்க
    தேவாதி தேவனைச் சந்திப்போமே (2)

    - எக்காள சத்தம்
    வானமும் பூமியும் மாறிடினும்
    வல்லவர் வாக்கு தான் மாறிடாதே (2)
    தேவதூதர் பாடல் தொனிக்கத்
    தேவன் அவரையே தரிசிப்போமே (2)

    - எக்காள சத்தம்
    கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
    விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் (2)
    கண்ணீர் கவலை அங்கே இல்லை
    கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார் (2)

    - எக்காள சத்தம்
    கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
    கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் (2)
    பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
    பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் (2)

    - எக்காள சத்தம்



    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ekkala satham / எக்காள சத்தம் வானில் - Tamil Christian Songs Lyrics Ekkala satham / எக்காள சத்தம் வானில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5

    2 comments:

    1. This comment has been removed by the author.

      ReplyDelete
    2. Praise the lord ,Jesus name always gets glorify into this world forever and ever.

      ReplyDelete

    Powered by Blogger.