Antho kalvariyil arumai / அந்தோ கல்வாரியில் அருமை - Tamil Christian Songs Lyrics

    Antho kalvariyil arumai / அந்தோ கல்வாரியில் அருமை - Tamil Christian Songs Lyrics

    அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
    சிறுமை அடைந்தே தொங்கினார் (2)

    மகிமை மாட்சிமை மறந் திகழ்ந்தோராய்
    கொடுமை குருசைத் தெரிந் தெடுத்தார் (2)
    மாயலோகத் தோடழியாது யான்
    தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

                                                                    - அந்தோ
    அழகுமில்லை சௌந்தர்யமில்லை
    அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க (2)
    பல நிந்தைகள் சுமந்தாலுமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

                                                                    - அந்தோ
    சிலுவைக் காட்சியைக் கண்டு முன்னேறி
    சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே (2)
    என்னைச் சேர்த்திட வருவே னென்றார்
    என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

                                                                     - அந்தோ


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Antho kalvariyil arumai / அந்தோ கல்வாரியில் அருமை - Tamil Christian Songs Lyrics Antho kalvariyil arumai / அந்தோ கல்வாரியில் அருமை  - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 13, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.