Indha Naal Iratchipaku Yetra Naal / இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Indha Naal Iratchipaku Yetra Naal / இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

     இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,

    ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்

    அனுபல்லவி

    சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து

    பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

    சரணங்கள்

    1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் - தேவ
    சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் --- இந்நாள்

    2. வாடித் திகைத்துப் புலம்பாதே - உன்தன்
    மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே --- இந்நாள்

    3. உலகச் சிநேகம் வெகு கேடு - அதற்
    குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு --- இந்நாள்

    4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு - அவர்
    இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு --- இந்நாள்

    5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே - பவ
    இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே --- இந்நாள்

    6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு - அவர்
    கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு --- இந்நாள்

    7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் - உனைப்
    பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் --- இந்நாள்

    8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி - நித்திய
    வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி --- இந்நாள்

    9. ஏசுபெருமானை நீ நம்பு - அவர்
    என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு --- இந்நாள்
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Indha Naal Iratchipaku Yetra Naal / இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் - Tamil Christian Songs Lyrics Indha Naal Iratchipaku Yetra Naal / இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 29, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.