Pava Sanjalathi Neeka / பாவ சஞ்சலத்தை நீக்க - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Pava Sanjalathi Neeka / பாவ சஞ்சலத்தை நீக்க - Tamil Christian Songs Lyrics

    1. பாவ சஞ்சலத்தை நீக்க
    பிராண நண்பர்தான் உண்டே!
    பாவ பாரம் தீர்ந்து போக
    மீட்பர் பாதம் தஞ்சமே;
    சால துக்க துன்பத்தாலே
    நெஞ்சம் நொந்து சோருங்கால்,
    துன்பம் இன்பமாக மாறும்
    ஊக்கமான ஜெபத்தால்.

    2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
    இயேசுவண்டை சேருவோம்;
    மோச நாசம் நேரிட்டாலும்
    ஜெப தூபம் காட்டுவோம்;
    நீக்குவாரே நெஞ்சின் நோவை
    பெலவீனம் தாங்குவார்;
    நீக்குவாரே மனச் சோர்பை,
    தீய குணம் மாற்றுவார்.

    3. பெலவீனமான போதும்
    கிருபாசனமுண்டே;
    பந்து ஜனம் சாகும் போதும்
    புகலிடம் இதுவே;
    ஒப்பில்லாத பிராண நேசா!
    உம்மை நம்பி நேசிப்போம்;
    அளவற்ற அருள் நாதா!
    உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Pava Sanjalathi Neeka / பாவ சஞ்சலத்தை நீக்க - Tamil Christian Songs Lyrics Pava Sanjalathi Neeka / பாவ சஞ்சலத்தை நீக்க - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.