Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் : Lyrics - Christking - Lyrics

    Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் : Lyrics

    Theeya Manathai Matra Varum

    தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
    நேய ஆவியே

    1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
    பாவி நான் – தீய

    2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
    தீர்க்கும், தஞ்சமே – தீய

    3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
    பாவி நான் ஐயா – தீய

    4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
    இதயம் அஞ்சவே – தீய

    5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
    புகழ்ந்து காக்கவே – தீய

    6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
    கிருபை தேடவே – தீய

    7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
    தெளிவு வேண்டவே – தீய

    8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
    சிறப்பாய் ஏற்றவே – தீய

    Worship Songs Lyrics,David
    Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் : Lyrics Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் : Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.