Yetthanai tiral en / எத்தனை திரள் என் பாவம் என் - Tamil Christian Songs Lyrics

    Yetthanai tiral en / எத்தனை திரள் என் பாவம் என் - Tamil Christian Songs Lyrics


       

        எத்தனை திரள் என் பாவம் என் தேவனே
        எளியன்மேல் இரங்கையனே (2)
        நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
        நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே

                                                                                           - எத்தனை
        பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ
        பணிந்திடல் ஒழிவேனோ (2)
        சுத்தமுறுங் கரம்கால்கள் விலாவினில்
        தோன்றது காயங்கள் தூய சிநேகா

                                                                                          - எத்தனை
        என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
        இடைவிடாதிருக்கையிலே (2)
        உன்றன் மிகுங் கிருபை ஓ மிகவும் பெரிதே
        எத்தம மனமுடைஆயாய் எனை ஆளும்

                                                                                          - எத்தனை
        ஆயங் கொள்வோன்போல் பாவ ஸ்தீரிபோல்
        அருகிலிருந்த கள்ளன்போல் (2)
        நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்
        நீ எனக்காகவே மரித்தனை பரனே

                                                                                          - எத்தனை
        கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
        கெடு பஞ்சத்தால் நலிந்தேன் (2)
        இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல னான்
        எனை ரட்தசித்திடல் உன்றன் நிமித்தமே அப்பனே

                                                                                           - எத்தனை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yetthanai tiral en / எத்தனை திரள் என் பாவம் என் - Tamil Christian Songs Lyrics Yetthanai tiral en / எத்தனை திரள் என் பாவம் என் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.