Yesu raja um namathai | இயேசு ராஜா உம் நாமத்தை - Lyrics - Christking - Lyrics

    Yesu raja um namathai | இயேசு ராஜா உம் நாமத்தை - Lyrics



    இயேசு ராஜா உம் நாமத்தை
    சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
    உந்தன் அன்பை என் உள்ளத்தில்
    எண்ணி எண்ணி துதிபாடுவேன்

    ஆமென் ஆமென் அல்லேலுயா

    பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
    பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
    பரமனே உம் அன்பு மிகப்பெரியது
    பாரினில் நிகரேதும் இல்லாதது

    வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
    வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
    வார்த்தையினாலே என்னைத் தேற்றி
    வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்

    உலகமே என்னை வெறுத்தாலும்
    நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
    நீதியின் தேவன் என்னோடு உண்டு
    நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Yesu raja um namathai | இயேசு ராஜா உம் நாமத்தை - Lyrics Yesu raja um namathai | இயேசு ராஜா உம் நாமத்தை - Lyrics Reviewed by Christchoir on July 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.