Yesuvin Pinnal Nan Selvaen - இயேசுவின் பின்னால் நான் செல்வேன் - Christking - Lyrics

    Yesuvin Pinnal Nan Selvaen - இயேசுவின் பின்னால் நான் செல்வேன்


    Yesuvin Pinnal Nan Selvaen
    Thirumbi Paarkka Maatraen
    Siluvaiyae Munnaal
    Ulagamae Pinnal
    Yesu Sindhiya Raththathinaalae
    Yendrum vidudhalaiyae

    1. Ulagatthin Perumai Selvatthinpattru
    Yellam Udhari Vittaen
    Udal, Porul, Aavi Udamaigal Yaavum
    Oppu Koduthu Vittaen
    Naan Avar Aalayam Yenakkulae Yesu
    Yenna Nadandhaalum yevvelaiyilum
    Yeppodhum Thudhitthiduvaen

    2. Veadhanai Nerukkam Yinnalgal Yidargal
    Yedhuvum, Pirikkadhu
    Vetri Vaendhan Yen Yesuvin Anbaal
    Muttrilum Jeyam Peruvaen
    Nigazhgindra Kaalamo Varugindra Kaalamo
    Vaazhvo Saavo Valla Thoodharo
    Pirikkavae Mudiyaadhu

    3. Agilamengilum Aandavar Yesu
    Aatchi Seidhidanum
    Aaviyil Niraindhu Satthiyam Peasum
    Sabaigal Perugidanum
    Yen Sondha Dhesam Yesuvukae
    Yesu Dhaan Vazhi Yengira Muzhakkam
    Yengum Keatkanumae

    4. Pazhayana Kadandhana
    Puthiyana Pugundhana
    Paraloga Kudimagan Naan
    Marurubamaagi Manavaalan Yesuvai
    Mugamugamaai Kaanbaen
    Yidhayamellam Yeangudhaiah
    Yesuvae Undhan Anbu Nadhiyilae
    Yennalum Neendhanumae
    இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
    திரும்பி பார்க்க மாட்டேன்

    சிலுவையே முன்னால்
    உலகமே பின்னால்
    இயேசு சிந்திய இரத்தத்தினாலே
    என்றும் விடுதலையே

    1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
    எல்லாம் உதறி விட்டேன்
    உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
    ஒப்புக் கொடுத்து விட்டேன்
    நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
    என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
    எப்போதும் துதித்திடுவேன்

    2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
    எதுவும் பிரிக்காது
    வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
    முற்றிலும் ஜெயம் பெறுவேன்
    நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
    வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
    பிரிக்கவே முடியாது

    3. அகிலமெங்கிலும் ஆண்டவர் இயேசு
    ஆட்சி செய்திடணும்
    ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
    சபைகள் பெருகிடணும்
    என் சொந்த தேசம் இயேசுவுக்கே
    இயேசுதான் வழி என்கிற முழக்கம்
    எங்கும் கேட்கணுமே

    4. பழையன கடந்தன
    புதியன புகுந்தன
    பரலோக குடிமகன் நான்
    மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
    முகமுகமாய் காண்பேன்
    இதயமெல்லாம் ஏங்குதைய்யா
    இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
    எந்நாளும் நிந்தணுமே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yesuvin Pinnal Nan Selvaen - இயேசுவின் பின்னால் நான் செல்வேன் Yesuvin Pinnal Nan Selvaen - இயேசுவின் பின்னால் நான் செல்வேன் Reviewed by Christchoir on October 15, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.