Padaithavar unnai kaividamattar - Lyrics - Christking - Lyrics

    Padaithavar unnai kaividamattar - Lyrics

    படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்
    பதறாதே மனமே
    அழைத்தவர் உன்னை நடத்திடுவாரே
    அனுதின வாழ்க்கையிலே

    நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
    நாம் போற்றிடும் இயேசு பெரியவர்

    பெயர் சொல்லி அழைத்த உன்னத தேவன்
    ஒருபோதும் உன்னை மறவார்
    காரிருளில் நீ நடந்திடும் வேளை
    ஒளியாய் வந்திடுவார்

    கடந்ததை நினைத்து அழுதிட வேண்டாம்
    கலங்கிடவும் வேண்டாம்
    தீமைகள் யாவும் நன்மையாய் மாறும்
    நம் இயேசு ஜீவிப்பதால்

    வறண்ட நிலங்கள் வயல்வெளியாகும்
    பள்ளங்கள் நிரப்பப்படும்
    தேவனால் கூடும் எல்லமே கூடும்
    கூடாத்தொன்றுமில்லையே

    அகிலம் ஆளும் ராஜாதி ராஜா
    நம் துணையானாரே
    யெகோவாயீரே போதும் அவரே
    என்றும் நம் வாழ்வினிலே
    Christian,Reegan Gomez,Tamil,Songs,Lyrics
    Padaithavar unnai kaividamattar - Lyrics Padaithavar unnai kaividamattar - Lyrics Reviewed by Christking on March 24, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.