Thuthikku paathirar enthan - Lyrics - Christking - Lyrics

    Thuthikku paathirar enthan - Lyrics

    துதிக்குப் பாத்திரரே
    எந்தன் துணையாளரே
    ஆபத்து காலத்தில் அடைக்கலமே
    ஆதரவே என் அனுகூலமே

    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உம்மை ஆராதனை செய்கிறேன்
    உன்னதரே உயர்ந்தவரே
    உம்மையே ஆராதிப்பேன்

    யெகோவா ஷாலோம் நீரே
    எந்தன் சமாதானமே
    நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
    சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்

    யெகோவா ஷம்மா நீரே
    என்னோடு இருப்பவரே
    என்ன வந்தாலும் கலங்கிடேனே
    அப்பா நீர் என்னோடு இருப்பதனால்

    யெகோவா நிசி நீரே
    எந்தன் ஜெயக் கொடியே
    மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
    மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்
    Christian,Reegan Gomez,Tamil,Songs,Lyrics
    Thuthikku paathirar enthan - Lyrics Thuthikku paathirar enthan - Lyrics Reviewed by Christking on March 24, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.