Anandame Jeya Jeya - ஆனந்தமே! ஜெயா! ஜெயா! : Lyrics - Christking - Lyrics

    Anandame Jeya Jeya - ஆனந்தமே! ஜெயா! ஜெயா! : Lyrics

    Anandame Jeya Jeya

    ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

    ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே

    1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
    தளராதுள கிறிஸ்தானவராம்
    எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
    இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே

    2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
    மோசகஸ்திகள் தனிலேயுழல
    தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
    தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே

    3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
    பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
    தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
    தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

    Worship Songs Lyrics,
    Anandame Jeya Jeya - ஆனந்தமே! ஜெயா! ஜெயா! : Lyrics Anandame Jeya Jeya - ஆனந்தமே! ஜெயா! ஜெயா! : Lyrics Reviewed by Christking on April 21, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.