Siluvai Naadhar Yesuvin - சிலுவை நாதர் இயேசுவின் : Lyrics - Christking - Lyrics

    Siluvai Naadhar Yesuvin - சிலுவை நாதர் இயேசுவின் : Lyrics


    சிலுவை நாதர் இயேசுவின்
    பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
    என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
    காயங்களையும் பார்க்கின்றன

    என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
    தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
    தீய வழியில் என் கால்கள் சென்றால்
    தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே

    தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
    ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
    வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
    முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்

    திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
    வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
    தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
    கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்

    அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
    அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
    கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
    கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

    Siluvai Naathar Yesuvin
    Paeroli Veesidum Thooyak Kannkal
    Ennai Nnokkip Paarkkintana – Tham
    Kaayangalaiyum Paarkkintana

    En Kaikal Paavangal Seythittal
    Tham Kaiyin Kaayangal Paarkkintarae
    Theeya Valiyil en Kaalkal Sental
    Tham Kaalin Kaayangal Paarkkintarae

    Theettulla Ennnam en Ithayam Konndaal
    Eetti Paayntha Nenjai Nnokkukintar
    Veenn Perumai Ennil Idam Pettaாl
    Mulmuti Paarththida Aengukintar

    Thirunthidaa Paavikkaay Alukintar
    Varunthidaa Pillaikkaay Kalangukintar
    Tham Kannnneer Kaayaththil Vilunthida
    Kannnneerum Iraththamum Sinthukintar

    Avar Iraththam en Paavam Kaluvidum
    Avar Kannnneer Ennai Merukaettidum
    Kalangarai Vilakkaaka Oli Veesuvaen
    Kalanguvorai Avar Manthai Serppaen
    Siluvai Naadhar Yesuvin - சிலுவை நாதர் இயேசுவின் : Lyrics Siluvai Naadhar Yesuvin - சிலுவை நாதர் இயேசுவின் : Lyrics Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.