Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே : Lyrics - Christking - Lyrics

    Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே : Lyrics

    Tholugirom Yenkal Pithaavae

    தொழுகிறோம் எங்கள் பிதாவே
    பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

    பரிசுத்த அலங்காரத்துடனே
    தரிசிப்பதினால் சரணம் சரணம்

    1. வெண்மையும் சிவப்புமானவர்
    உண்மையே உருவாய்க் கொண்டவர்
    என்னையே மீட்டுக் கொண்டவர்
    அன்னையே இதோ சரணம் சரணம் — தொழுகிறோம்

    2. தலை தங்க மயமானவர்
    தலை மயிர் சுருள் சுருளானவர்
    பதினாயிரம் பேரில் சிறந்தவர்
    பதினாயிரமாம் சரணம் சரணம் — தொழுகிறோம்

    3. கண்கள் புறாக்கண்கள் போல
    கன்னங்கள் பாத்திகள் போல
    சின்னங்கள் சிறந்ததாலே
    எண்ணில்லாத சரணம் சரணம் — தொழுகிறோம்

    4. கரங்கள் பொன் வளையல்கள் போல
    நிறங்களும் தந்தத்தைப் போல
    கால்களும் கல் தூண்கள் போல
    காண்பதாலே சரணம் சரணம் — தொழுகிறோம்

    5. சமஸ்த சபையின் சிரசே
    நமஸ்காரம் எங்கள் அரசே
    பிரதானம் எம் மூலைக்கல்லே
    ஏராளமாய் சரணம் சரணம் — தொழுகிறோம்

    6. அடியார்களின் அஸ்திபாரம்
    அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
    கூடி வந்த எம் அலங்காரம்
    கோடா கோடியாம் சரணம் சரணம் — தொழுகிறோம்

    7. பார்த்திபனே கன தோத்திரம்
    கீர்த்தனம் மங்களம் நித்தியம்
    வாழ்க வாழ்க வாழ்க என்றும்
    அல்லேலூயா ஆமென் ஆமென் — தொழுகிறோம்

    Worship Songs Lyrics,David
    Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே : Lyrics Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே : Lyrics Reviewed by Christking on May 09, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.