Ulagin Pava Barathal – உலகில் பாவப் பாரத்தால் : Lyrics - Christking - Lyrics

    Ulagin Pava Barathal – உலகில் பாவப் பாரத்தால் : Lyrics

    Ulagin Pava Barathal

    உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
    பார்ந்த நரரே வந்து சேரும்

    அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
    ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா

    1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
    பாவம் தீராதென்றிப்போரும்
    ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
    ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்

    2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
    இளமை என்று சொல்லிச் செல்லாதே;
    வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
    வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்

    3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
    வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
    சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
    சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்

    4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
    காலம் கழித்தே உழல்வோரே,
    காலமே தேட மறந்தோரே – உங்கள்
    கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்

    Worship Songs Lyrics,David
    Ulagin Pava Barathal – உலகில் பாவப் பாரத்தால் : Lyrics Ulagin Pava Barathal – உலகில் பாவப் பாரத்தால் : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.