Um Patham Paninthen – உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் : Lyrics - Christking - Lyrics

    Um Patham Paninthen – உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் : Lyrics

    Um Patham Paninthen : Key : C-min/8 beat/Tempo - 100

    உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
    உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

    சரணங்கள்

    1. பரிசுத்தமே பரவசமே
    பரனேசருளே வரம் பொருளே
    தேடினதால் கண்டடைந்தேன்
    பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம்

    2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
    புதிய கிருபை புது கவியால்
    நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
    நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்

    3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
    நெருங்கி உதவி எனக்களித்தீர்
    திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
    தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்

    4. என் முன் செல்லும் உம் சமூகம்
    எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
    உமது கோலும் உம் தடியும்
    உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்

    5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
    கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
    கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
    கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம்

    6. என் இதய தெய்வமே நீர்
    எனது இறைவா ஆருயிரே
    நேசிக்கிறேன் இயேசுவே உம்
    நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்

    7. சீருடனே பேருடனே
    சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
    சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
    சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

    Um paatham paninthaen
    Ennalum thuthiyae
    Ummayanti yaarai paaduvaen-yesayya
    Unthan anbu ullam ponguthae

    1) Parisithamae paravasamae
    Paranae sarulae varam porulae
    Thedinathaal kandadainthaen
    Paadida paadalgal eenthalitheer

    2) Puthu ennayaal puthu belathaal
    Puthiya kirubai puthu kaviyaal
    Nirappi nitham nadathuginteer
    Noothana salemil serthiduveer

    3) Nerukkathilae ummai alaithaen
    Nerungi uthavi enakkalitheer
    Thisaikettengum alainthidaamal
    Theeviram vanthennai thaanguginteer

    4) En mun sellum um samugam
    Enakku alikkum ilaipaaruthal
    Umathu kolum um thadium
    Unmayaai ennayum thettiduthae

    5) Kani sedi neer nilaithirukkum
    Kodiyaai adiyaen padarnthilanga
    Kilai narukki kalai pidungi
    Kartharar kaathennai sutham seitheer

    6) En ithaya theivamae neer
    Enathu iraivaa aaruyirae
    Nesikkiraen yesuvae um
    Nesa mugam entu kandiduvaen

    7) Seerudanae perudanae
    Siranthu jolikkum kodumudiyil
    Seekkiramaai sernthiduveer
    Seeyonai vaanjithu naadugiraen

    Worship Songs Lyrics,David
    Um Patham Paninthen – உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் : Lyrics Um Patham Paninthen – உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.