Ummai Aaraadhikka – உம்மை ஆராதிக்கத்தான் : Lyrics - Christking - Lyrics

    Ummai Aaraadhikka – உம்மை ஆராதிக்கத்தான் : Lyrics

    Ummai Aaraadhikka E min 86 4/4

    உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்
    உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்
    உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
    உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்

    ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்
    உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்
    முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்
    மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று
    வாழ்கின்ற வேந்தன்

    எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ
    கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ
    தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு
    எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள
    ஆண்டவர் மைந்தன்

    பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே
    தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே
    நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ
    நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ
    நீர் ஆள்கின்றீர் என்றும்

    உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே
    தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே
    நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே
    ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா
    நீர் வாழ்க வாழ்க என்று

    அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்
    ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
    பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
    மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே

    Ummai aaraadhikka thaan ennai arindheer
    Ummai aarparikka thaan ennai azhaitheer
    Undhan naamam uyarthavae ennil jeevan kodutheer
    Ummai patrikolla thaan ennai padaitheer

    Yezhu vinmeen kaithanil ponvilakku mathiyil
    Ulaavidum unnadhar neerae umakku nigar
    Mundhinavarum neerthaan pindhinavarum neerthaan
    Marithavarum neerthaan moondraam naalil
    Uyir petru vaalgindra vendhan

    Eppakkamum koormaiyo pattayam patrineero
    Kangal akkni jwaalaiyo paadhangal vengalamo
    Dheva aavi yezhundu vinmeengalum yezhundu
    Ellaam yesuvil undu apperpatta azhagulla
    Aandavar mainthan

    Parisuthar neerthaanae sathiyarum neerthaanae
    Dhaaveedhin thiravukol kondavarum neerthaanae
    Neer pootiya vaasalai maanidan thirappaano
    Neer thirandha vaasalai pooti vaikka koodumo
    Neer aalgindeer endrum

    Unmaiyum sathiyamum ulladangum saatchiyae
    Dhevanin sirushtikku aadhiyae amen neerae
    Needhiyulla naadhanae neer endrum nithiyarae
    Aalayathin aandavaa aaraadhanai naayagaa
    Neer vaazhga vaazhga endru

    Appa pidhavay naan ummai thuthipaen – endhan
    Aathma naesarae naan ummai thuthipaen – pari
    Sutha aaviyae endrum ummai thuthipaen
    Moondril ondraai vilangum en dheva dhevanae

    Worship Songs Lyrics,Ravi Bharath
    Ummai Aaraadhikka – உம்மை ஆராதிக்கத்தான் : Lyrics Ummai Aaraadhikka – உம்மை ஆராதிக்கத்தான் : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.