Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு - Christking - Lyrics

    Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு

    Ummai Pola Yarundu

    உம்மை போல யாருண்டு
    நன்மை செய்ய நீருண்டு
    உம்மைத் தானே நம்புவேன்
    என் தேவா

    உம்மைதான் எந்தன் வாழ்வில்
    ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
    நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
    வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல

    எல்ஷடாய் ஆராதிப்பேன்
    எலோஹிம் ஆராதிப்பேன்
    அடோனாய் ஆராதிப்பேன்
    இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல

    கலங்கி நின்ற என்னைக் கண்டு
    கண்ணீரைத் துடைத்தவரே
    காலமெல்லாம் கண்மணிபோல
    கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல

    மரணத்தின் பாதைதனில்
    மனம் தளர்ந்து நின்ற என்னை
    மருத்துவராய் நீரே வந்து
    மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல

    Worship Songs Lyrics,David
    Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு Reviewed by Christking on May 07, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.