Naan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன் : Lyrics - Christking - Lyrics

Naan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன் : Lyrics

Naan Nesikum Devan

நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவர் ஆகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்

3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார்

4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக் காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே

Worship Songs Lyrics,
Naan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன் : Lyrics Naan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன் : Lyrics Reviewed by Christking on June 24, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.