Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம் : Lyrics

நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்
நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த
நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்
நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்
நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
1. எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே
யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே
முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா
இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
2. அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா
அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா
உள்ளங்கைகளில் உன்னை வரைந்தவர்
உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்
உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
3. உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை
உன்னுடைய துயரங்களில் உன்க்கு பங்கு கொள்ள வருவதில்லை
உள்ளத்தின் பாரங்கன் அறிந்தவர் இயேசுதான்
உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்
நெஞ்சுக்குள்ளே நீ நினைத்தால்
ஓடிவரும் தேவன்தான்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம் : Lyrics
Reviewed by Christking
on
June 23, 2016
Rating:

No comments: