Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் : Lyrics - Christking - Lyrics

Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் : Lyrics

Patham Ondre Vendum

பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்

1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம்

2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம்

3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம்

5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம்

6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம்

Worship Songs Lyrics,David
Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் : Lyrics Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் : Lyrics Reviewed by Christking on June 09, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.