Oru Kodi Paadalgal Naan Paaduven : Lyrics

    Oru Kodi Paadalgal Naan Paaduven : Lyrics


    ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன்
    அதை பாமாலையாக நான் சூடுவேன்
    உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
    புகழ்பாடி புகழ்பாடி நான் வாழுவேன்

    மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்
    மலர் பாக்கள் பல கோடி உருவாக்கினாய் - 2
    என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே - அதில்
    எழும் ராகம் எல்லாமுன் புகழ் பாடுதே
    ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே
    அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே

    இளங்காலைப் பொழுதுந்தன் புகழ்பாடுதே - அங்கு
    விரிகின்ற மலர் உந்தன் புகழ் பாடுதே - 2
    அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து
    கரை சேரும் நுரையாவும் கவிதைச் சரம்
    ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே
    அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே

    Songs Description :
    Song : Oru Kodi Paadalgal Naan Paaduven
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Oru Kodi Paadalgal Naan Paaduven : Lyrics Oru Kodi Paadalgal Naan Paaduven : Lyrics Reviewed by Unknown on November 26, 2016 Rating: 5
    Powered by Blogger.