தீங்கு நினையாதே!
எல்லா மிருகங்களிலும், யானை மிகவும் ஞாபக சக்தியுள்ளது. மட்டுமல்ல, மற்றவர்கள் செய்த தீமையை, எத்தனை ஆண்டு காலமானாலும் மறக்காமல், தன் உள்ளத்திலேயே வைத்திருக்குமாம்.
ஒரு முறை, ஒரு சிறுவன் ஒரு யானைக்கு ஒரு தேங்காயைக் கொடுப்பது போல கொடுத்தான். யானை அதை ஆவலாய் உட்கொள்ள உடைத்தபோது, உள்ளே முழுவதும் சுண்ணாம்பு இருந்தது. யானையின் துதிக்கை அந்த சுண்ணாம்பினால் வெந்து போனது. அதை அந்த யானை மறக்கவே இல்லை.
பல ஆண்டுகளுக்குப் பின், அந்த சிறுவன் வாலிபனாய் மாறினான். எனினும் அந்த யானை ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில், அவனை அடையாளம் கண்டு துரத்திக் கொண்டுபோய் மிதித்துக் கொன்றது! இப்படித்தான், இன்று அநேகர் கசப்போடும், வைராக்கியத்தோடும், பழிவாங்கும் எண்ணத்தோடும் திரிகிறார்கள்.
அன்பு ஒருபோதும் தீங்கு நினைப்பதில்லை. தேவபிள்ளைகளே, தெய்வீக அன்போடு நீங்கள் பிறரது குற்றங்களை மன்னிப்பது மட்டுமல்ல; மறந்தும் விடுவீர்களாக!
“ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபே. 4:32).
தீங்கு நினையாதே!
Reviewed by Christking
on
August 08, 2017
Rating:
Reviewed by Christking
on
August 08, 2017
Rating: