Indha Mangalam Selikavea - இந்த மங்களம் செழிக்கவே : Lyrics - Christking - Lyrics

    Indha Mangalam Selikavea - இந்த மங்களம் செழிக்கவே : Lyrics


    இந்த மங்களம் செழிக்கவே - கிருபை செய்யும்
    எங்கள் திரித்துவ தேவனே
    சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
    கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

    1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
    ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
    நீதி வரம் நாலுங்கொடுத்தாய் - பெற்றுப் பெறுகி
    நிற்க உலகத்தில் விடுத்தாய்
    மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
    ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

    2. தக்க ஆபிரகாமும் விண்டனன் - அதனை மன
    துக்குள் எலியேசா் கொண்டனன்
    முக்ய ஆரான் நிலத்தண்டினன் - நினைத்தபடி
    சக்கியமதாகக் கண்டனன்
    பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
    தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

    3. சத்திய வேதத்தின் வாசனே - அருளுபரி
    சுத்த சுவிசேட நேசனே
    பக்தர்கள் பவ விமோசனே - பழுதணுவும்
    அற்ற கிறிஸ்தேசுராஜனே
    வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
    புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

    Indha Mangalam Selikavea - இந்த மங்களம் செழிக்கவே : Lyrics Indha Mangalam Selikavea - இந்த மங்களம் செழிக்கவே : Lyrics Reviewed by Christking on September 09, 2017 Rating: 5
    Powered by Blogger.