Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார் - Lyrics - Christking - Lyrics

    Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார் - Lyrics


    Worship Songs Lyrics

    எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
    எபிநேசர் செய்த நன்மைகளை - 2

    நன்றி நன்றி நன்றி
    கோடி கோடி நன்றி
    பலிகள் செலுத்திடுவோம் - 2

    தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
    நீதிமான் ஆக்கினாரே - 2
    நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
    நித்திய ஜீவன் தந்தார் - 2 -நன்றி

    காயப்பட்டார் நாம் சுகமாக
    நோய்கள் நீங்கியதே - 2
    சுமந்து கொண்டார் நம் பாடுகள்
    சுகமானோம் தழும்புகளால் - 2

    சாபமானார் நம் சாபம் நீங்க
    மீட்டாரே சாபத்தினின்று
    ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
    பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2

    ஏழ்மையானார் சிலுவையிலே
    செல்வந்தனாய் நாம் வாழ
    சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
    முடிவில்லா வாழ்வு தந்தார் - 2

    Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார் - Lyrics Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார் - Lyrics Reviewed by Christking on January 02, 2018 Rating: 5
    Powered by Blogger.