Enthan Yesu Vallavar - எந்தன் இயேசு வல்லவர் - Christking - Lyrics

    Enthan Yesu Vallavar - எந்தன் இயேசு வல்லவர்

    Album : | Artist :

    எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்)
    என்றும் நடத்துவார்
    ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே
    அனுதினம் அன்பருடன்
    இணைந்து செல்லுவேன்

    அற்புதமாம் அவர் அன்பு
    அண்டினோர் காக்கும் தூய அன்பு
    இப்பூவினில் இவரைப்போல்
    அன்பர் எவருண்டு - மாறாதவர்
    எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்

    சர்வ வல்ல தேவனிவர்
    சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
    எந்நாளுமே எந்தனையே
    தாங்கிடும் வல்லவராம் - நம்பிடுவேன்
    என்றென்றுமாய் எந்தன் இயேசுவை

    கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
    சீரான பாதை நடத்திடுவார் - எந்தன்
    வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
    எந்தன் நேசர் காத்திடுவார்
    என்றும் பின் செல்லுவேன்

    குற்றங்களை மன்னித்தவர்
    தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார்
    எந்தன் நேசர் ஒப்பற்றவர்
    பொறுமை நிறைந்தவர் - சார்ந்திடுவேன்
    இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்

    Enthan Yesu Vallavar - எந்தன் இயேசு வல்லவர் Enthan Yesu Vallavar - எந்தன் இயேசு வல்லவர் Reviewed by Christking on March 07, 2018 Rating: 5
    Powered by Blogger.