Abundant Blessing! - அதிக ஆசீரவாதம்! - Christking - Lyrics

Abundant Blessing! - அதிக ஆசீரவாதம்!

[restabs alignment="osc-tabs-left" responsive="true" icon="true" text="More"]
[restab title="Tamil" active="active"]
“ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக, மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்” (லூக். 5:5,6).


மனுஷன் தானாக பிரயாசப்படும்போது, முயற்சி அதிகமாக இருந்தாலும், பலன் குறைவாகவே இருக்கும். அதே நேரம், கர்த்தருடைய கரம் குறுக்கிடும்போது முயற்சி குறைவாக இருந்தாலும், பலன் அதிகமாக விளங்கும்! அந்த தேவன் தாமே உங்களுடைய முயற்சிகளையெல்லாம் ஆசீர்வதித்து, உங்களை உயர்த்துவாராக.

அன்று கல்யாண வீட்டில் திராட்சரசம் குறைவுபட்டது. மனித முயற்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தருக்கு திராட்சரசத்தைக் கொண்டுவர வெறும் தண்ணீரே போதுமானதாக இருந்தது. அந்த தேவன், தம்முடைய மகிமையான ஐசுவரியத்தின்படியே, உங்களுடைய குறைவுகளையெல்லாம் நிறைவாக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் வரிகொடுப்பதற்கு பணம் தேவைப்பட்டது. எங்கே போய் அதை அவர்கள் சம்பாதிப்பார்கள்? கர்த்தருடைய வார்த்தை குறுக்கிட்டது. முதலாவது பிடிக்கிற மீனின் வாயில், அந்தப் பணம் அவர்களுக்காக காத்துக்கொண்டேயிருந்தது (மத். 17:27).

வனாந்தரத்தில் இயேசுகிறிஸ்து மூன்று நாட்கள் பிரசங்கித்த பின்பு, இயேசு சீஷர்களைப் பார்த்து, “இந்த திரளான மக்களுக்கு, இங்கே போஜனம் கொடுங்கள்” என்றார். மனுஷ முயற்சியின்படி, அவர்கள் எங்கே போய் அப்பங்களை வாங்குவார்கள்? அதற்கு தேவையான பணத்திற்கு என்ன செய்வார்கள்? கர்த்தருடைய கரம் குறுக்கிட்டதினால், அத்தனை பேரையும் போஷிப்பதற்கு வெறும் ஐந்து அப்பமும், இரண்டு மீனும் போதுமானதாய் இருந்தது.

மரித்துப்போன யவீருவின் மகளை, நாயீனூர் விதவையின் மகனை, லாசருவை உயிரோடு எழுப்ப, எந்த டாக்டர்களாலும் முடியாது. ஆனால் கர்த்தருடைய வல்லமை குறுக்கிட்டபோதோ, கிறிஸ்துவினுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் அவர்களை உயிர்ப்பிக்க போதுமானதாகவே இருந்தது. தேவபிள்ளைகளே, அந்த கர்த்தர் உங்களோடுகூட, இருக்கிறார். நீங்கள் உங்கள் சுயவிருப்பத்தின்படி வலையைப் போட்டால், முயற்சிதான் வீணாகுமே தவிர, ஆசீர்வாதமான மீன்களை அள்ள முடியாது. அதே நேரத்தில் நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின்படியே செய்ய ஒப்புக்கொடுப்பீர்களென்றால், எளிதான முயற்சியினால், பெரிதான ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்வீர்கள்.

அநேகர் உணர்ச்சிவசப்பட்டு ஊழியத்தில் இறங்கிவிடுகிறார்கள். ஆர்வமிக்க ஒரு பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, மிஷனெரியாக புறப்பட்டு விடுகிறார்கள். பிறகு சோதனைகளும், பாடுகளும் வரும்போது, அவர்களால் நின்று பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தவர்களாய், தடுமாறுகிறார்கள். இதன் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் முதலாவதாகவே தேவசித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்காமல், சுயசித்தமாக புறப்படுவதுதான். தேவபிள்ளைகளே, உங்களுடைய வழியைப் பார்க்கிலும், கர்த்தருடைய வழிகள் ஆயிரம் மடங்கு மேன்மையானது. கர்த்தருடைய பாதையிலே சமாதானம் உண்டு, சந்தோஷம் உண்டு.

நினைவிற்கு:- “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்கு வேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்” (மத். 4:19,20).

[/restab]
[restab title="English"]
“Master, we have toiled all night and caught nothing; nevertheless at your word I will let down the net.” And when they had done this, they caught a great number of fish, and their net was breaking” (Luke 5:5, 6).


When a man puts forth efforts on his own he labours more but the outcome will not be proportional. But at the same time, when the hand of God intervenes the result.May the Lord bless all your efforts and exalt you!

On that day, there was a shortfall of wine in that marriage house. Human efforts could do nothing. But for God, mere water was enough to bring in the required wine. That God is powerful to change your inadequacy into perfection with His glorious riches.
Jesus and His disciples required money for paying taxes. Where could they earn it? The Word of God came across and the money was kept ready in the mouth of a fish that was caught first (Mathew 17:27).

After preaching in the wilderness for three days, Jesus asked the disciples to provide food to the great multitude. How could they procure so many pieces of bread with their humanitarian efforts? What would they do to obtain so much of money? The hand of God came across and thus just five pieces of bread and two fish were enough to feed each one of the multitudes.

No doctor could bring the dead daughter of Jairus, dead son of the widow from Nain and the dead Lazarus back to life. But when the power of God came across, every Word of God which proceeded from the mouth of Christ was sufficient to resurrect them.

Dear children of God that God is with you. If you throw the net relying on your own will, your efforts will end in futile and you cannot catch great number of fishes of blessing. But at the same time, if you obey the words of God and submit yourself to act according to His Word, you will inherit huge blessings with minimum efforts.

Many people resort to ministering due to emotional impacts. On hearing one sermon of enthusiasm they initiate to turn into missionaries. But when they face tests and sufferings, they are unable to withstand them and thus struggle being defeated in their mission. Do you know the reasons for this? It is because they initiate on their own will without commanding themselves to the will of God. Dear children of God, the ways of God are hundred times greater than that of yours. There is peace in the path of God; joy is there.

To meditate: “Follow me, and I will make you fishers of men.” They immediately left their nets and followed Him” (Mathew 4:19, 20)

[/restab][/restabs]
Abundant Blessing! - அதிக ஆசீரவாதம்! Abundant Blessing! - அதிக ஆசீரவாதம்! Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.