En Idhayam Yaarukku - என் இதயம் யாருக்குத் தெரியும் - Christking - Lyrics

    En Idhayam Yaarukku - என் இதயம் யாருக்குத் தெரியும்

    என் இதயம் யாருக்குத் தெரியும்
    என் வேதனை யாருக்குப் புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னைத் தேற்றுவார்

    சிறகு ஒடிந்த பறவை
    அது வானில் பறக்குமோ - உடைந்த
    உள்ளமும் ஒன்று சேருமோ

    மங்கி எரியும் விளக்கு
    பெருங்காற்றில் நிலைக்குமோ
    வீசும் புயலிலே படகும் தப்புமோ

    அங்கே தெரியும் வெளிச்சம்
    அது கலங்கரை தீபமோ - இயேசு
    ராஜனின் முகத்தின் வெளிச்சம்

    என் இதயம் யாருக்குத் தெரியும்
    என் வேதனை யாருக்குப் புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    இயேசென்னை தேற்றுவார்
    En Idhayam Yaarukku - என் இதயம் யாருக்குத் தெரியும் En Idhayam Yaarukku - என் இதயம் யாருக்குத் தெரியும் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.