Aruvadaiyo Miguthi - அறுவடையோ மிகுதி - Christking - Lyrics

    Aruvadaiyo Miguthi - அறுவடையோ மிகுதி

    அறுவடையோ மிகுதி
    ஆட்களோ கொஞ்சம்
    அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்

    1. வயல் நிலங்கள் எல்லாம்
    விளைந்து விட்டதன்றோ
    ஓடி ஓடி அறுப்போம்
    களஞ்சியத்தில் சேர்ப்போம் – அறுவடையோ

    2. திறப்பிலே நிற்போம்
    விரிசல்களை அடைப்போம்
    விழித்திருந்து ஜெபிப்போம்
    வெற்றி கண்டு மகிழ்வோம் – அறுவடையோ

    3. நதியளவு கண்ணீர்
    நாள்முழுதும் வடிப்போம்
    இந்தியாவை நினைப்போம்
    இரவும் பகலும் ஜெபிப்போம் – அறுவடையோ

    4. ஆத்ம பாரம் கொள்வோம்
    ஆர்வத்தோடு செல்வோம்
    யுத்த களத்தில் நிற்போம்
    கோலியாத்தை வெல்வோம் – அறுவடையோ

    5. தொடர்ந்து நன்மை செய்வோம்
    சோர்வில்லாமல் செல்வோம்
    குறித்த காலம் வருமே
    அறுவடை நிச்சயமே – அறுவடையோ
    Aruvadaiyo Miguthi - அறுவடையோ மிகுதி Aruvadaiyo Miguthi - அறுவடையோ மிகுதி Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.