Blessed by Father! - பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! - Christking - Lyrics

Blessed by Father! - பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே!

[restabs alignment="osc-tabs-left" responsive="true" icon="true" text="More"]
[restab title="Tamil" active="active"]
“என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” (மத்.25:34).

கர்த்தர் நம்மை எவ்வளவு அன்போடுகூட அழைக்கிறார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். “பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே!” என்று அவர் நம்மைக் கூப்பிடும்போது, நம்முடைய உள்ளமெல்லாம் மகிழ்ந்து களிகூரும்.

உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும், நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெறுமையாய் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதற்காக மாத்திரம் அழைக்கப்படவில்லை. நித்தியமான ராஜ்யத்திற்கென்று அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த ராஜ்யத்தை கர்த்தர் உங்களுக்காகவே, உலகம் உண்டானது முதல் ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.

ஆகவேதான் அப். பவுல், அந்த அழைப்பின் மகிமையை சிந்தித்து தியானித்துப் பார்த்துவிட்டு, “நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையா இருங்கள்” என்று குறிப்பிடுகிறார் (எபே. 4:1-3). உங்களுடைய காதுகளில் கர்த்தருடைய அழைப்பின் சத்தம் தொனித்துக் கொண்டே இருக்கட்டும். தேவனுடைய காருண்யத்தை தியானித்துக் கொண்டேயிருப்பீர்களாக. எப்படியாவது அந்த பரலோக பாக்கியத்திற்கு பாத்திரவான்களாய் நிலை நிற்பீர்களாக.

அப். பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதும்போது, “மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்க வேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்” (1 தெச. 2:11,12).

தேவபிள்ளைகளே, இந்த உலகத்தில் நீங்கள் செலவழிக்கிற நாட்கள் மிக வேகமாக கடந்துபோகும். அது ஒருவேளை எழுபதோ, எண்பதோ ஆண்டானாலும்கூட, அது புல்லின் பூவைப் போல உதிர்ந்துபோகிறது. ஆனால் நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் வாழும் நாட்களோ நித்திய நித்தியமானது. அந்த ராஜ்யத்தில் பிரவேசிக்கவும், கர்த்தர் அழைத்த அழைப்பில் நிலை நிற்கவும் உங்களை ஒப்புக் கொடுப்பீர்களாக. அதற்காக எந்தப் பாடுகளையும் சகிக்க நீங்கள் ஆயத்தமாய் இருப்பீர்களாக. உபத்திரவங்களின் வழியாகவும், நிந்தைகளின் வழியாகவும், கடந்து செல்லும்போது, உங்களுடைய கண்கள் அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தையே நோக்கிக் கொண்டே இருக்கட்டும்.

வேதம் சொல்லுகிறது, “நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது” (2 தெச. 1:5). இயேசுகிறிஸ்து பூமியில் வாழ்ந்தாலும், தான் இந்த உலகத்தான் அல்ல என்பதைக் குறித்து அவர் திட்டமான வெளிப்பாடு உடையவராய் இருந்தார். நான் இந்த உலகத்தான் அல்லாததுபோல, நீங்களும் இந்த உலகத்தான் அல்ல என்று தெளிவாக குறிப்பிட்டார். அவருடைய கண்கள் எப்போதும் பரலோகத்தையே நோக்கிக் கொண்டிருந்தது. ஆகவே அவர் ஜெயம் கொண்டவராய், பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
நினைவிற்கு:- “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம்” (பிலி.3:20).

[/restab]
[restab title="English"]
“Come, you blessed of my Father, inherit the kingdom prepared for you from the foundation of the world” (Mathew 25:34).

Just think over how lovingly God calls us. Our hearts rejoice when he addresses us as ‘you blessed by my father.’

You have to confirm the God’s calling and you being chosen by Him. You have not been called to simply inherit the blessings of this world. You have been called for the Eternal Kingdom. God has prepared this Kingdom for you right from the foundation of the world.

After due thinking and meditation, Paul the Apostle points out “I, therefore, the prisoner of the Lord, beseech you to walk worthy of the calling with which you were called ……endeavouring to keep the unity of the Spirit in the bond of peace” (Ephesians 4:1, 3). Let the voice of the calling of God be ringing in your ears always. May you keep on meditating His kindness! May you stand steadfast as worthy lot for that Heavenly blessing!

When Apostle Paul wrote to the Thessalonians, he says, “…..as you know how we exhorted and comforted and charged every one of you, as a father does his own children,  that you would walk worthy of God who calls you into His own kingdom and glory” (I Thessalonians 2:11,12).

Dear children of God, your days in this world will fade away very soon. It may be seventy years or eighty but in the end it withers like a flower of the field. But your life in the Kingdom of God is eternal. Submit yourself for standing firm on the calling of God and to get into that Kingdom. Be prepared to tolerate any suffering for that purpose. Even when you move across tribulations and reproaches, let your eyes be fixed on the Kingdom of the loving Son.

The Bible says, “…which is manifest evidence of the righteous judgment of God that you may be counted worthy of the kingdom of God, for which you also suffer” (II Thessalonians 1:5). Though Jesus Christ lived on the earth, He had a firm revelation that He was not of the world. He clearly said that you are not of the world just as He is not of the world. His eyes were always fixed on the heaven. So, He is victoriously seated on the right side of the Father.
To meditate: “For our citizenship is in heaven, from which we also eagerly wait for the Savior, the Lord Jesus Christ” (Philippians 3:20).

[/restab][/restabs]
Blessed by Father! - பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! Blessed by Father! - பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! Reviewed by Christking on May 04, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.