Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம் - Christking - Lyrics

    Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம்

    எக்காளம் ஊதிடுவோம்
    எரிகோவை தகர்த்திடுவோம்
    கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
    கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

    கிதியோன்களே புறப்படுங்கள்
    எதிரிகளை துரத்திடுங்கள்
    தீபங்களை ஏந்திடுங்கள் - தெருத்
    தெருவாய் நுழைந்திடுங்கள்

    சிம்சோன்களே எழும்பிடுங்கள்
    வல்லமையால் நிரம்பிடுங்கள்
    சீறிவரும் சிங்கங்களை
    சிறைப்பிடித்து கிழித்திடுங்கள்

    தெபோராக்களே விழித்திடுங்கள்
    உபவாசித்து ஜெயித்திடுங்கள்
    எஸ்தர்களே கூடிடுங்கள்
    இரவுகளை பகலாக்குங்கள்

    அதிகாலையில் காத்திருப்போம்
    அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
    கழுகுபோல பெலனடைந்து
    கர்த்தருக்காய் பறந்திடுவோம்
    Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம் Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.