En Manathu Thudikkuthu - என் மனது துடிக்குது - Christking - Lyrics

    En Manathu Thudikkuthu - என் மனது துடிக்குது

    என் மனது துடிக்குது
    குலை பதைத்து நோகும்
    தெய்வ மைந்தனின் சவம்
    கல்லறைக்குப் போகும்

    ஆ அவரே மரத்திலே
    அறையப்பட்டிறந்தார்
    கர்த்தர்தாமே பாவியின்
    சாபத்தைச் சுமந்தார்

    என் பாவத்தால் என் தீங்கினால்
    இக்கேடுண்டாயிருக்கும்
    ஆகையால் என்னுள்ளத்தில்
    தத்தளிப்பெடுக்கும்

    என் ஆண்டவர் என் ரட்சகர்
    வதைந்த மேனியாக
    ரத்தமாய்க் கிடக்கிறார்
    என் ரட்சிப்புக்காக

    வெட்டுண்டோரே ஆ உம்மையே
    பணிந்தென் ஆவி பேணும்
    ஆகிலும் என் நிமித்தம்
    நான் புலம்பவேணும்

    குற்றமற்ற கர்த்தாவுட
    அனலாம் ரத்தம் ஊறும்
    மனஸ்தாபமின்றி ஆர்
    அதைப் பார்க்கக்கூடும்

    ஆ இயேசுவே என் ஜீவனே
    நீர் கல்லறைக்குள்ளாக
    வைக்கப்பட்டதைத் தினம்
    நான் சிந்திப்பேனாக

    நான் மிகவும் எந்நேரமும்
    என் மரணநாள் மட்டும்
    என் கதியாம் இயேசுவே
    உம்மை வாஞ்சிக்கட்டும்
    En Manathu Thudikkuthu - என் மனது துடிக்குது En Manathu Thudikkuthu - என் மனது துடிக்குது Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.