En Uyirana Yesu - என் உயிரான இயேசு - Christking - Lyrics

    En Uyirana Yesu - என் உயிரான இயேசு

    என் உயிரான இயேசு
    என் உயிரோடு கலந்தீர்-என்
    உயிரே நான் உம்மை துதிப்பேன்

    என் உயிரான உயிரான
    உயிரான இயேசு

    உலகமெல்லாம் மறக்குதையா
    உணர்வெல்லாம் இனிக்குதையா
    உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
    உம் அன்பை ருசிக்கையிலே ராஜா

    உம் வசனம் எனக்கு உணவாகும்
    உடலுக்கெல்லாம் அது மருந்தாகும்
    இரவும் பகலுமையா உந்தன்
    வசனம் தியானிக்கிறேன்

    உம் திரு நாமம் உலகத்திலே
    உயர்ந்த அடைக்கல அரண்தானே
    நீதீமான் அதற்குள்ளே ஓடி
    சுகமாய் இருந்திடுவான்
    En Uyirana Yesu - என் உயிரான இயேசு En Uyirana Yesu - என் உயிரான இயேசு Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.