Ennai Nirappum Yesu - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே - Christking - Lyrics

    Ennai Nirappum Yesu - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

    என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
    இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

    பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
    பெலனே வாருமே
    பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
    வல்லமையே வாருமே

    தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
    தேற்றிட வாருமே
    ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
    ஆவியே வாருமே

    வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
    வள்ளலே வாருமே
    கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
    கருணையே வாருமே

    கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
    சாந்தமே வாருமே
    பாவங்கள் கழுவி பரிசுத்தமாக்கும்
    பரமனே வாருமே
    Ennai Nirappum Yesu - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Ennai Nirappum Yesu - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.