Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர்

    Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர்

    எந்நாளுந் துதித்திடுவீர் - அந்த
    இசர வேலின் ஏகோவா வைநீர்

    இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே
    விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை

    கர்த்தாவின் வழிசெய்யவும் - தீமை
    கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
    கெம்பீர மாகச் சொல்லவும்
    சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்
    கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா

    தன்னாடு தனைச் சந்தித்து - மீட்டுத்
    தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
    தாசன்தா வீது வம்சத்து
    இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்
    இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று

    அந்தகாரத்திலிருப்போர் - சாவின்
    ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
    அங்குபிர காசமடைந்து
    அந்தச மாதாந உந்தரங் கண்டிட
    ஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர்

    விந்தைப்பி தாவவர்க்கும் - ஏக
    வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
    வீவிலா ஆவியவர்க்கும்
    சந்ததம் மகிமை சந்தத மென்று
    சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி
    Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர் Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர் Reviewed by Christking on May 04, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.