Enthan Jeevan Yesuve - என்தன் ஜீவன் இயேசுவே - Christking - Lyrics

    Enthan Jeevan Yesuve - என்தன் ஜீவன் இயேசுவே

    என்தன் ஜீவன் இயேசுவே
    சொந்தமாக ஆளுமே
    எந்தன் காலம் நேரமும்
    நீர் கையாடியருளும்

    என்தன் கை பேரன்பினால்
    ஏவப்படும்;என்தன் கால்
    சேவை செய்ய விரையும்
    அழகாக விளங்கும்

    என்தன் நாவு இன்பமாய்
    உம்மைப் பாடவும்; என்வாய்
    மீட்பின் செய்தி கூறவும்
    ஏதுவாக்கியருளும்

    என்தன் ஆஸ்தி தேவரீர்
    முற்றும் அங்கீகரிப்பீர்
    புத்தி கல்வி யாவையும்
    சித்தம் போல் பிரயோகியும்

    என்தன் சித்தம் இயேசுவே
    ஒப்புவித்துவிட்டேனே;
    என்தன் நெஞ்சில் தங்குவீர்
    அதை நித்தம் ஆளுவீர்

    திருப்பாதம் பற்றினேன்
    என்தன் நேசம் ஊற்றினேன்
    என்னையே சமூலமாய்
    தத்தம் செய்தேன் நித்தமாய்
    Enthan Jeevan Yesuve - என்தன் ஜீவன் இயேசுவே Enthan Jeevan Yesuve - என்தன் ஜீவன் இயேசுவே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.