Intha Velaiyinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும் - Christking - Lyrics

    Intha Velaiyinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும்

    இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே - இப்போ
    எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே

    அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே - முன்
    ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே

    அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே - இந்த
    ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே

    ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே - இங்கு
    அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே

    சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே - அருள்
    ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே

    வாரும் வாரும் கண்பாரும் பரிசுத்த ஆவியே - இன்று
    வந்து சபைமீதில் சிந்தை வைத்தருளும் ஆவியே

    தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே - நிதம்
    சித்தம் வைத்தென் மீதில் முற்றிலுங் காத்திடும் ஆவியே
    Intha Velaiyinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும் Intha Velaiyinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.