Isravelae Bayapadathe Naane - இஸ்ரவேலே பயப்படாதே நானே - Christking - Lyrics

    Isravelae Bayapadathe Naane - இஸ்ரவேலே பயப்படாதே நானே

    இஸ்ரவேலே பயப்படாதே
    நானே உன் தேவன்

    வழியும் சத்தியமும்
    ஜீவனும் நானே

    உன்னை நானே தெரிந்து கொண்டேனே - மகனே
    உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
    ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
    கைவிடமாட்டேன் - வழியும்

    தாய் மறந்தாலும் நான் மறவேன் - மகனே
    உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
    ஒருபோதும் நான் மறப்பதில்லை
    மறந்து போவதில்லை

    துன்ப நேரம் சோர்ந்து விடாதே -மகனே (மகளே)
    ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
    சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
    எழுந்து ஒளி வீசு

    தீயின் நடுவே நீ நடந்தாலும்
    எரிந்து நீயும் போகமாட்டாய்
    ஆறுகளை நீயும் கடக்கும்போதும்
    மூழ்கிப் போக மாட்டாய்
    Isravelae Bayapadathe Naane - இஸ்ரவேலே பயப்படாதே நானே Isravelae Bayapadathe Naane - இஸ்ரவேலே பயப்படாதே நானே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.