Isravelae Kartharai Nambu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு - Christking - Lyrics

    Isravelae Kartharai Nambu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

    இஸ்ரவேலே
    கர்த்தரை நம்பு - 2
    இஸ்ரவேலே
    அவர் உன் துணையும் கேடகமானவர் - 2

    புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
    குப்பையிலிருந்து உயர்த்திடுவார் - 2
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    உட்கார செய்பவர் உனக்கு உண்டு - 2

    அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
    அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2
    உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
    உன்னை என்றும் மறப்பதுமில்லை - 2

    அக்கினி மீது நீ நடக்கும் போதும்
    ஆறுகளை நீ கடக்கும் போதும் - 2
    அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
    ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2
    Isravelae Kartharai Nambu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Isravelae Kartharai Nambu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.