Kallum Allave Kayam - கல்லும் அல்லவே காயம் - Christking - Lyrics

    Kallum Allave Kayam - கல்லும் அல்லவே காயம்

    கல்லும் அல்லவே காயம் - வல்லும் அல்லவே - இது

    வெள்ளி பொன் விலைமதியா மேரும் அல்லவே

    வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் - அதால்
    நல்ல வழி தேடி தேவ நாமத்தைத் தியானி

    சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ - சாலமோன்
    பார் அறியச் சொன்னதை நீ பார்த்தறியாயோ

    காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே - இங்கே
    போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே

    வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே - மாய
    தேக நரர் நாட்களும் சீக்கிரம் கழியுமே

    இராப்பகல் இருள் வெளிச்சம் மாறும் வண்ணமே - ஐயோ
    நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே

    பூவதும் உதிரும் பசும்புல்லும் வதங்கும் - அது
    போலவே நரர் உருவம் மாறிவதங்கும்

    மேலது கீழ் கீழதுமேல் ஆம் உருளைபோல் - நரர்
    மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே

    நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும் - ஐயோ
    அன்னவன் மலையும் நேரம் யாவும் கலையும்

    ஆசனம் துரைத்தனம் தத்துவங்கள் ஒழியும் - அர
    சாண்ட மன்னாரும் ஒரு நாள் மாண்டொழிவாரே

    யாவும் ஓட்டமாகப் பாயும் யாவும் அழியும் - மெய்த்
    தேவபக்தி யே கெலிக்கும் ஜீவன் நிலைக்கும்
    Kallum Allave Kayam - கல்லும் அல்லவே காயம் Kallum Allave Kayam - கல்லும் அல்லவே காயம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.