Maanuvel Thondare - மானுவேல் தொண்டரே - Christking - Lyrics

    Maanuvel Thondare - மானுவேல் தொண்டரே

    மானுவேல் தொண்டரே - ஆர்ப்பரிந்து
    மகிழ்ந்து பூரிப்போம்

    மானிலமீது சமாதானமா மென்ற
    வானவர் வாழ்த்துவறா தெனநம்பும்
    நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்
    நண்ணும் பகலருணோதயம் ஆகுதே
    நாடுவோம் - அதைத் தேடுவோம் - இனி
    நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம்

    தீர்க்க ருரைப்படியே - உலகெங்கும்
    தீங்கீலாக் காலம் வரும்
    தாக்கும் படைக்கலங்கள் - கிருஷிகச்
    சாதனமாகி விடும்
    மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்
    மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்
    வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள்
    நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
    நிலைத்து - அன்பு - வளர்த்துக் - கரங்
    கொடுத்து - உற - வடுத்துமதிப்பர்

    போன காலங்களிலே - நடந்திட்ட
    பொல்லாங்கும் பாடுகளும்
    ஈனத் துரோகங்களும் - விளைவித்த
    ஈங்கிசை போதும் இனி
    வானபரனின் மலரடிக் கண்ணுற்று
    வல்ல பரிசுத்த் அன்பினாவி பெற்று
    மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு
    மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று
    மாட்சியாய் - அவர் - சாட்சியாய் - இந்த
    மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே

    சர்வ ஜனநேசம் - நிறைவுறத்
    தாமதமானாலும்
    கர்வம் பொறாமை பகை - தடை செய்யக்
    காலம் நீடித்தாலும்,
    அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால்
    ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
    இருளகல விடிவெள்ளி தோணுது
    எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
    யேசுவே - இக - மாசுடர் - அவர்
    நேசமே - புவித் - தோஷமகற்றிடும்
    Maanuvel Thondare - மானுவேல் தொண்டரே Maanuvel Thondare - மானுவேல் தொண்டரே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.