Neere Allamal En Vaazhvil - நீரேயல்லாமல் என் வாழ்வில் - Christking - Lyrics

    Neere Allamal En Vaazhvil - நீரேயல்லாமல் என் வாழ்வில்

    நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
    உம்மையல்லாமல் என் துணை யாருண்டு

    நேசிப்பார் யாருமில்லை - அன்பாய்
    உதவிடுவார் ஒருவருமில்லை
    கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
    ஆறுதல் அளிப்பார் இல்லை

    சோகங்கள் சூழும் நேரம் - கடும்
    பாரங்கள் நெருக்கும் போதும்
    பாரினில் என்னை தேற்றிட தேவா
    உம்மைப் போல் யாருமில்லை

    நிந்தைகள் நெருக்கங்களோ
    வியாகுலங்கள் வருத்தங்களோ
    கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
    பிரிந்திட முடியாதய்யா
    Neere Allamal En Vaazhvil - நீரேயல்லாமல் என் வாழ்வில் Neere Allamal En Vaazhvil - நீரேயல்லாமல் என் வாழ்வில் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.